தாய்ப்பாலின் நன்மைகள்
இது தாய்பால் வாரம். விழிப்புணர்வு செய்தி. பார்த்து படிக்கணும். இல்லாட்டி ஷேர் செய்யலாம்.
குழந்தைகளுக்கு முழுமையான உணவு கிடைகிறது.
அதில் எல்லாவித சத்துக்களும், மருத்துவ குணமும் அடங்கி இருக்கிறது.
குழந்தை வளர, வளர தாய்ப்பாலின் தன்மை குழந்தையின்
வளர்ச்சிக்கு ஏற்றார் போல சக்தி கிடைக்கும்.
அஞ்சு வயது குழந்தைகளுக்குள் சர்வே எடுத்ததில் டயேரியா வந்து இறக்கும் குழந்தைகள் விகிதம் தாய்ப்பால் இல்லாத குழந்தைகள் அதிகம் இருந்தனர்.
வயிற்று போக்கு ,வயிற்று வலி, உப்புசம் போன்றவை தாய்பால் குடிக்கும் குழந்தைகளை பாதிப்பது இல்லை.
வயிற்று உபாதைகளை தவிர்க்க உதவுகிறது.
காதில் வரும் இன்பெக்ஷன்ஸ் , மூச்சு குழாய் பிரச்சனைகளை குறைக்கும்.
அலெர்ஜி ,ஆஸ்த்மா, அரிப்பு, போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
SIDS (Sudden Infant Death) என்ற உடனடி பச்சிளம் குழந்தை இறப்பு தாய்பால் குடித்த குழந்தைளுக்கு மிக குறைவு.
மூளை காய்ச்சல், சில குறிப்பிட்ட வகை புற்று நோய்கள், குடல் அழற்சி , வயிற்று புண் போன்ற நோய்களை தவிர்க்க பெரிதும் உதவுகிறது.
பற்சிதைவு ஏற்படும் விகிதம் குறைவு.
தாய்பால் குடித்த குழந்தைகள் முகம் அழகு பெறும், நன்கு பேச்சு வரும்.,நேரான பற்கள முளைக்கும், தெளிவான பார்வை கிடைக்கும்.
தாய் பால் குடிக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அறிவாற்றலில் சிறந்து விளங்கும்.
அதில் உள்ள ப்ரோடீன் வேறு எந்த உணவுகளிலும் குழந்தைக்கு கிடைப்பதில்லை.முக்கியமாக மூளை வளர்ச்சிக்கு உதவும் ப்ரோடீன்கள் உள்ளன.
வயதான பிறகு வரும் இத நோய்களில் ரிஸ்க் குறைவு.
எலும்பு உறுதியாக வளர தாய்பால் உதவுகிறது.மிக அன்பாகவும்,அரவனைப்புடனும் வளர்க்க தாய்பால் உதவும்.
அம்மாவுடன் உள்ள நேசிப்பு அதிகமாகும்.
எந்த தடுப்பு மருந்து ஊசியாலும் கொடுக்க முடியாத எதிர்ப்பு சக்தியை தாய்பால் மட்டுமே கொடுக்கு.
பவுடர் பால் குடித்த குழந்தைகளை விட தாய்பால் கொடுத்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.அவை மருத்துவமனைக்கு வருவதும் குறைவு.
விட்டைமின் ஈ, இரும்பு சத்து தாய்பால் மூலம் கிடைக்கிறது. இரத்த சோகை வரும் வாய்ப்பு குறைவு.
ஹெர்னியா, அப்பைண்டிசைடிஸ் ,வயிற்று போக்கு ,ஆர்தரைடிஸ் தாக்கும் வாய்ப்புகள் தாய்பால் குடிதவர்களுக்கு குறைவு.
குழந்தை மிக குண்டாகும் பிரச்சனை இருக்காது.
தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்.
மார்பு, கர்பப்பை, ஓவரி கேன்சர்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
ரத்த சோகை வரும் வாய்ப்பு குறைவு.
ருமாட்டாயிட் ஆர்தரைடிசால் ஏற்படும் இறப்பிறக்கும் தாய்பால் கொடுக்கும் காலத்துக்கும் தொடர்பு உள்ளது.
தாய்பால் கொடுத்த தாய்மார்கள் அதிக ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
உடனடியாக கர்ப்பம் ஆகும் வாய்ப்பு குறைவு.
பால் பவுடர் மூல ஆகும் செலவு மிக அதிகம்.
குழந்தைகளுடன் அழகான பந்தமும் ,இணைப்பும் ,அரவணைப்பும் ஏற்படும்.
அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் செலவு குறையும்.
தாய்பால் கொடுக்கும் தாய்கள் வேலை நேரத்தின் பொழுது குழந்தை உடல்நிலையால் அவதிபடுவதில்லை.
கர்பப்பை சுருங்குவதற்க்கும், ரத்தபோக்கு குறையவும் உதவுகிறது.
சமூகத்துக்கும்,சுற்று சூழலுக்கும் ஏற்படும் நன்மைகள்.
நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் வளருவதால் உடல்நிலை பாதிப்பால் ஏற்படும் செலவுகள் அரசாங்கத்திற்கு மிக குறைவு.
மருத்துவ செலவுகள் குறைவதால் மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் லாபம்.
பால் பவுடர் பேக்கிங், போக்குவரத்து ,உற்பத்தி செலவு அவற்றால் ஏற்படும் குப்பைகள் போன்றவற்றால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகள் தவிர்க்கப்படும்.
குழந்தைகளுக்காக ஏற்படும் மருத்துவ செலவு குறைவதால் அரசாங்கமும் மக்களுக்கும் கொடுக்கும் வரி சுமையை குறைக்கும்.
வேலை செல்லும் தாய்மார்கள் குழந்தைகள் உடல் நிலை பற்றி கவலைபடாமல் நல்ல முறையில் வேலை செய்வர். உற்பத்தி பாதிப்பு ஏற்படாது.
மற்ற பயன்கள்.
தாயை நல்லமனநிலையில் வைக்கும் .அதை தவிர தாய்பால் கொடுக்கும் தாய்க்கு ஒரு ந்ம்மதியான மன நிலை கிடைக்கும்.
சிறிது உக்கார்ந்து ஓய்வெடுக்க குழந்தையுடன் நேரம் செலவிட நேரம் கிடைக்கும்.தாய்பால் தாய் மட்டும்தான் கொடுக்க முடியும் என்பதால் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
ஏழு மணி நேரம் வாரத்திற்கு மிச்ச படுத்தலாம். பவுடர் அல்லது புட்டி பால் தயாரிக்கும் நேரம் அதிகம்.
வெளியூர் செல்லும் பொழது,எங்கும்,எந்த நேரத்திலும் எந்தவித பாத்திரங்களும் தேவைப்படாமல் குழந்தைக்கு உணவு சரியான சூட்டில்,சுத்தமாக கொடுக்க முடியும்.
ஏதாவது இயற்கை பேரிடர்,தட்டுபாடு நேரங்கள் பொழுது புட்டிப்பால் கிடைக்காதது பற்றி கவலைப்பட தேவை இல்லை.
திட உணவு கொடுக்கும் நேரம் வரை தாய்பால் கொடுக்கும் குழந்தைகளின் கழிவுகள் அத்தனை வீச்சம் அடிக்காது,
தாய்பால் குடிக்கும் குழந்தைகள் தாய்க்கும் ,மற்றவர்களுக்கு அல்லது வளர்ப்பவர்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கும். குழம்பாது,தான் தாயை கண்டுகொள்ளும்.
Courtesy: Facebook
No comments:
Post a Comment