Monday, August 19, 2013

இன்சுலின் சுரக்க வாழைப்பூ:

இன்சுலின் சுரக்க வாழைப்பூ:



வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம். 

பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. 

வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.

அவை அதிக சுவையாகவும் இருக்கும். 

ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். 

வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். 

வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:

* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். 


இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

* மூலநோய் கட்டுக்குள் வரும்.

* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.

* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. 


வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.

1 comment: