Thursday, January 31, 2013

பப்பாளி பழத்தின் அற்ப்புதம் !!!

17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Courtesy: Facebook
சின்ன விஷயங்களின் அற்புதம்!

ஒரு பெரிய கோபுரம், பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம். ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை & சின்னச் சின்ன செயல்களை & தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை இதழ்தோறும் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வெந்தயம் 

இது உணவுப் பொருள் மட்டும் அல்ல. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில், ஓர் அற்புதமான கை மருந்து இது. வெந்தயம் எவ்வளவோ வகைகளில் மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது என்றாலும், வெந்தயத்தை வைத்து மிக எளிமையாக ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது... வெந்தயத் தண்ணீர் தயாரித்துக் குடிப்பது.

என்ன செய்ய வேண்டும்?

தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு கைப் பிடி வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்துவிடுங்கள். காலையில் எழுந்து பல் துலக்கியதும், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்துடன் அந்த நீரை அப்படியே குடித்துவிடுங்கள்.

என்ன பலன்?

வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. உடல் சூட்டை அப்படியே குறைக்கும்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். ஆகையால், மலம் நன்கு வெளியேறும். மலச்சிக்கல், மூலப் பிரச்னை உள்ளவர்களுக்குத் தீர்வு தரும்.

வெந்தய நீர், சிறுநீரைப் பெருக்கும். நீர் நன்கு பிரியும்.

வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் ஆகியவற்றை மட்டுப்படுத்தும்.

வாய் துர்நாற்றம், வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.

வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம். ஆகையால், ரத்தசோகை கட்டுப்படும்.

பித்தம் குறையும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

யாருக்கு எல்லாம் முக்கியம்?
வெயிலில் நின்று வேலை செய்யும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகளில் தொடங்கி உட்கார்ந்தே வேலை செய்யும் மென்பொருள் பொறியாளர்கள் வரை உடல் சூட்டை எதிர்கொள்ளும் எவருக்கும் முக்கியம்!

Courtesy - Facebook

Wednesday, January 30, 2013

மருத்துவத் துறையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ என்று சொல்லப்படும் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை இன்றைக்கு எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் அதைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் இந்தியாவில்... ஆனால், அந்த அற்புதம் இங்கேதான் நிகழ்ந்தது.

இந்த அறுவைசிகிச்சையை அறிமுகப்படுத்தி, அதன் சூட்சுமத்தை அனைவருக்கும் பயிற்றுவித்தவர் சுஷ்ருதா. கங்கைக் கரை நகரான வாரணாசியில் வாழ்ந்தவர். வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. சுஷ்ருதா எழுதிய சிகிச்சை குறிப்புகள் ‘சுஷ்ருதா சம்ஹிதா’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவனும் ஆறு ஆண்டு மருத்துவம் பயில வேண்டும் என்று நிர்ணயம் செய்திருந்த சுஷ்ருதாவின் குறிப்புகளில் அறுவைசிகிச்சையை எப்படிச் செய்வது என்று மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு அதை எவ்வாறு கற்பிப்பது என்றும் விளக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 120 அறுவைசிகிச்சை உபகரணங்கள்பற்றியும், 300 அறுவைசிகிச்சை முறைகள்பற்றியும் அவற்றில் விளக்கப்பட்டு உள்ளன. வெட்டி எடுத்தல், தழும்பாக்குதல், குத்துதல், ஆராய்தல், வெளியே எடுத்தல், கழிவுகளை வெளியே எடுத்தல், தையல் போடுதல், வலி நீக்கம் செய்தல் என்று அறுவைசிகிச்சையினை எட்டு விதமாக வகைப்படுத்துகிறார் சுஷ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரிபற்றியும் கணிசமான குறிப்புகள் அதில் உள்ளன.

பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நுணுக்கங்களான திட்டமிடுதல், நேர்த்தி ரத்த சேதம் தடுத்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவற்றை எல்லாம் சுஷ்ருதா தமது குறிப்பில் எழுதிவைத்து இருக்கிறார். மேலும், குறைபாடுள்ள இடங்களில் தோலை வெட்டி ஒட்டுதல் பக்கத்தில் உள்ள திசுக்களில் இருக்கும் ரத்தக் குழாய் மூலம் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்தல் போன்றவையும் விளக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கற்ற மூக்கினை வடிவமைக்கும் சிகிச்சையான ‘ரைனோபிளாஸ்டி’ சுஷ்ருதாவின் செயல்முறைகளில் மணிமகுடம் எனலாம்

Tuesday, January 29, 2013

சருமம் அழகாக இருக்க கேரட் சாப்பிடுங்க...

நம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று அழகும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் எதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டு முடித்தபின் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள். 

கேரட்டின் பலன்கள் :

கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

 உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

கேரட்  செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...

சருமம் அழகாக இருக்க கேரட் சாப்பிடுங்க...

நம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று அழகும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் எதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டு முடித்தபின்ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.

கேரட்டின் பலன்கள் :

கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...

Courtesy: facebook

கொத்தமல்லி எலுமிச்சை சூப்

தேவையான பொருட்கள்:எலுமிச்சம் பழச்சாறு 4 டீஸ்பூன், காய்கறி வேக வைத்த தண்ணீர் – அரை லிட்டர், பச்சை மிளகாய் – மூன்று, சிறிய துண்டு இஞ்சி, சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப‌

செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றவும். அது சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கியபின் அதில் காய்கறி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும் . அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இன்று ஒரு தகவல்(பக்கம்)

ஜெராக்ஸ் இயந்திரம்..! 

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து  ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால்  ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்  தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு  பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம்  ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது  ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது  ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன்  பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது  மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி  இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914 

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு  நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு  உரிமைத்தொகையாக மட்டும்  இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்

ஜெராக்ஸ் இயந்திரம்..!

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்.

courtesy - facebook

Monday, January 28, 2013

கண்களை பாதுக்காப்பது எப்படி ?

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். 

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.

அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.