Tuesday, January 29, 2013
இன்று ஒரு தகவல்(பக்கம்)
ஜெராக்ஸ் இயந்திரம்..!
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.
1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .
1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .
முயற்சியே மூலதனம்
கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்
இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்
தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது
தோல்வி மேல் தோல்வி
எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது
சாதித்த ஜெராக்ஸ் 914
பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்.
courtesy - facebook
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment