கொத்தமல்லி எலுமிச்சை சூப்
தேவையான பொருட்கள்:எலுமிச்சம் பழச்சாறு 4 டீஸ்பூன், காய்கறி வேக வைத்த தண்ணீர் – அரை லிட்டர், பச்சை மிளகாய் – மூன்று, சிறிய துண்டு இஞ்சி, சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றவும். அது சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கியபின் அதில் காய்கறி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும் . அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
நல்லது. படத்தைப் பார்த்தாலே, உடனே சூப செய்து குடிக்க வேண்டும் போல் உள்ளது! நன்றி!
ReplyDeleteword verificationஐ முதலில் தூக்குங்கள்
ReplyDeleteஉயிரை வாங்குகிறது. comment mediation லகானை Blogger settings மூலம் உங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் நல்லது. உங்களுக்கு நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள்
நன்றி ஐயா
ReplyDelete