Thursday, February 21, 2013

மணத்தக்காளிக் கீரைத் தண்ணீச் சாறு

‘‘சத்துக்களைத் தேடித் தேடிக் குழந்தைகளுக்கு ஊட்டவேண்டிய காலகட்டம் இது. ஏழைக்கு ஏற்றது கீரை என்ற காலம் மலையேறி, கீரையின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. இருந்தாலும், வாரத்தில் மூன்று நாட்கள் விதவிதமான கீரைகளைச் சமைத்துவிடுவேன். இதனால் ரத்த சோகை, வாய்ப்புண் தொந்தரவு போன்றவை வீட்டில் யாருக்கும் இருந்தது கிடையாது. மணத்தக்காளிக் கீரைத் தண்ணீர்ச் சாறை சூப்பாக அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். ருசியும் மணமும் நன்றாக இருக்கும்!’’ என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சண்முகப்ரியா ராம்பிரபு.  சூப் செய்யும் முறையையும் விளக்குகிறார். 
      
தேவையான பொருட்கள்: மணத்தக்காளிக் கீரை ஒரு கட்டு, பூண்டு & 15 பல், பொடியாக நறுக்கிய வெங்காயம் & ஒரு கப், கடுகு, வெந்தயம் & தலா அரை டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 2, தேங்காய்ப்பால் மற்றும் பால் & தலா ஒரு டம்ளர், உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கடுகு வெந்தயம் சேர்த்து வெடிக்கவிடுங்கள்.  பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி அரிசி களைந்த இரண்டாவது தண்ணீர் தேவையான அளவு ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, கீரை, உப்பு போட்டு மூடவும், கீரை வெந்ததும், தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் ஊற்றிச் சீரகத்தைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.

சித்த மருத்துவர் கண்ணன்: பொதுவாகக் கீரை வகைகளில் ஒருசில சத்துக்கள் மட்டுமே அதிகம். ஆனால், மணத்தக்காளிக் கீரையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல சத்துக்களும் இருக்கின்றன. மணத்தக்காளிக் கீரையில் உள்ள சொலானைன் (ஷிஷீறீணீஸீவீஸீமீ) என்ற வேதிப்பொருள் வாய்ப்புண், நாக்குப்புண், குடல்புண், வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துகின்றன. இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது.  மணத்தக்காளிக் கீரை எல்லா வயதினருக்கும் ஏற்ற கீரை.

Courtesy

No comments:

Post a Comment