காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு அருந்தி வந்தால் ஏற்படம் நன்மைகள் !!!
மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.
இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுகள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புகள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நாள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநாள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்கள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.
இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநாள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.
அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செய்யுறது. சாயங்கால நேரத்துல செய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்காய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைகள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.
இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.
மாலையில் கடுக்காய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்காய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்காய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்காய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.
ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்காய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது என்கிறார் மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்குமரன் (95514 86617) இது போன்ற நல்ல தகவல்களை இன்று ஒரு தகவல்களை நமக்கு தந்து கொண்டு இருக்கும் பரமக்குடி சுமதி அவர்களுக்கு மற்றும் ஒருமுறை நன்றியே தெரிவித்து கொள்கிறோம்
நன்றி
======>பரமக்குடி சுமதி ====>
Thursday, February 28, 2013
Tuesday, February 26, 2013
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!
ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.
பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.
எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.
தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.
இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.
இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.
ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.
“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.
அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.
நன்றி : பரமக்குடி சுமதி

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Courtesy: Facebook
Friday, February 22, 2013
ட்ரை க்ரேப்ஸ் (உலர்ந்த திராட்சை) - 5 விஷயங்கள்
------------------------------ ------------------------------ -----------
1) சுக்ரோஸ், வைட்டமின்கள், காலிஷியம், அமொனோ அமிலம், பொட்டாஷியம், மெக்னிஷியம், நார்சத்து, இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் ஆகிய சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது.
2) இந்த உலர்ந்த திராட்சையை தினமும் நான்கைந்து சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்திக்கு நல்லது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் தீரும்.
3) ஒரு க்ளாஸ் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். பத்து உலர்ந்த திராட்சையை அதில் போட்டு காய்ச்சி, ஆற வைத்தபின் குடியுங்கள். தொடர்ந்து குடித்துவர மலச் சிக்கல் ஏற்படாது, இரவில் நன்றாக தூக்கம் வரும்.
4) குழந்தைகளின் வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. கேசரி, பாயசம் மற்றும் இனிப்புப் பண்டங்களில் இதைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். கேக், புட்டிங், பிஸ்கெட் போன்றவற்றிலும் இதை சேர்க்க சுவை மட்டும் இல்லாது சத்தும் கூடுதலாகக் கிடைக்கும்.
5) ரத்தத்தை சுத்திகரிக்கும். அதிக கலோரிகள் இருந்தாலும், கொழுப்புச் சத்து மிகவும் குறைவு அதனால் தினசரி உணவில் இதை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம்.
COURTESY: FACEBOOK
------------------------------

Thursday, February 21, 2013
மணத்தக்காளிக் கீரைத் தண்ணீச் சாறு
‘‘சத்துக்களைத் தேடித் தேடிக் குழந்தைகளுக்கு ஊட்டவேண்டிய காலகட்டம் இது. ஏழைக்கு ஏற்றது கீரை என்ற காலம் மலையேறி, கீரையின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. இருந்தாலும், வாரத்தில் மூன்று நாட்கள் விதவிதமான கீரைகளைச் சமைத்துவிடுவேன். இதனால் ரத்த சோகை, வாய்ப்புண் தொந்தரவு போன்றவை வீட்டில் யாருக்கும் இருந்தது கிடையாது. மணத்தக்காளிக் கீரைத் தண்ணீர்ச் சாறை சூப்பாக அப்படியே குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். ருசியும் மணமும் நன்றாக இருக்கும்!’’ என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சண்முகப்ரியா ராம்பிரபு. சூப் செய்யும் முறையையும் விளக்குகிறார்.
தேவையான பொருட்கள்: மணத்தக்காளிக் கீரை ஒரு கட்டு, பூண்டு & 15 பல், பொடியாக நறுக்கிய வெங்காயம் & ஒரு கப், கடுகு, வெந்தயம் & தலா அரை டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 2, தேங்காய்ப்பால் மற்றும் பால் & தலா ஒரு டம்ளர், உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கடுகு வெந்தயம் சேர்த்து வெடிக்கவிடுங்கள். பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி அரிசி களைந்த இரண்டாவது தண்ணீர் தேவையான அளவு ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, கீரை, உப்பு போட்டு மூடவும், கீரை வெந்ததும், தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் ஊற்றிச் சீரகத்தைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.
சித்த மருத்துவர் கண்ணன்: பொதுவாகக் கீரை வகைகளில் ஒருசில சத்துக்கள் மட்டுமே அதிகம். ஆனால், மணத்தக்காளிக் கீரையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல சத்துக்களும் இருக்கின்றன. மணத்தக்காளிக் கீரையில் உள்ள சொலானைன் (ஷிஷீறீணீஸீவீஸீமீ) என்ற வேதிப்பொருள் வாய்ப்புண், நாக்குப்புண், குடல்புண், வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துகின்றன. இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. மணத்தக்காளிக் கீரை எல்லா வயதினருக்கும் ஏற்ற கீரை.

Wednesday, February 20, 2013
இன்று ஒரு தகவல்(பக்கம்)
LikeComment
Tag Photo |
நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!
இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம்,கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார். ''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும். இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது. பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை. வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம். உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது ''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும். 'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்’ - என்கிறார் வள்ளுவர். அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்! நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும்,உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று குறிப்பிடுகின்றார் நன்றி தங்கராஜ் ( இராமநாதபுரம் ) |
நலம் தரும் நெல்லிக்காய் ஜூஸ்
நலம் தரும் நெல்லிக்காய் ஜூஸ்
______________________________ ___
கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. (ஜில்லுன்னு குடிங்க!)
கண் பார்வை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். (இளமைக்கு கியாரண்டி!)
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். (ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே என்று பாடலாம்!)
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூல் குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து விடும். (உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆகிடுங்க!)
நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். (சூப்பர், சூப்பர்!)
நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. (ட்ரை பண்ணிப் பாருங்களேன்!)

______________________________

Monday, February 18, 2013
வெற்றிலை போடுவது ஏன்?
வெற்றிலை போடுவது ஏன்?
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Subscribe to:
Posts (Atom)