Sunday, September 1, 2013

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்













நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்

தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் பிரபலமானது. பொதுவாக ஊத்தாப்பம் அரிசியால் செய்யப்படும் ஒரு ரெசிபி. 
ஆனால் அரிசிக்கு பதிலாக, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடியவாறு ஓட்ஸ் கொண்டு, அருமையான முறையில் ஒரு ஆரோக்கியமான ஊத்தாப்பம் செய்யலாம். 
மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையுடன், வித்தியாசமான சுவையைக் கொண்டது.

இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் - 4 துண்டுகள்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/2 கப்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மேலே தூவுவதற்கு...

கேரட் - 1 (தோலுரித்து, துருவியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் கோதுமை பிரட்டை சுற்றியுள்ள பகுதியை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு, 
அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு பௌலில், 
மேலே தூவுவதற்கு என்று கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


பின்பு மற்றொரு பௌலில் அரைத்த ஓட்ஸ், பிரட் பொடி, ரவை, சமையல் சோடா, 
உப்பு, சீரகம், தயிர் சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.


அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், 
அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று சற்று தடிமனாக ஊற்றி, 
அதன் மேல் கேரட் கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 
முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.


இப்போது சூப்பரான ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெடி!!! 
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment