உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. இந்தியா இரண்டாவது இடம் உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும். பாதிப்பிற்கு காரணம் இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளுடன் விவாதியுங்கள் தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும். கண்காணிப்பு அவசியம் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை. கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள். பெண் குழந்தையா கூடுதல் கவனம் பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை. தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய “குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது: இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன. உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும். Courtesy: Facebook |
Sunday, March 24, 2013
உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
Timeline Photos
உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. இந்தியா இரண்டாவது இடம் உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும். பாதிப்பிற்கு காரணம் இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளுடன் விவாதியுங்கள் தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும். கண்காணிப்பு அவசியம் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை. கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள். பெண் குழந்தையா கூடுதல் கவனம் பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை. தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய “குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது: இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன. உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும். |
நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்
ஆஸ்துமா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய்
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.
நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.
ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.
* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.
* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
100 ரூபாய்க்குள்.... எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர்!
100 ரூபாய்க்குள்....
எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர்!
சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும்.
மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள்.
பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள்.
இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது!
Courtesy: Facebook
Sunday, March 17, 2013
முட்டைக்கோஸ் - 15 பலன்கள்
முட்டைக்கோஸ் - 15 பலன்கள்
------------------------------ ------------
கீரை வகையைச் சேர்ந்தமுட்டைக் கோஸில் வைட்டமின் ஏ, இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் புரதம், தாது உப்புக்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.
பலன்கள்:
1. உடலுக்கு ஊட்டம் தரும்
2. உடல் வளர்ச்சி மிகவும் சிறந்தது
3. பார்வைக் கோளாறுகளை போக்கும். கண் நரம்புகளைச் சீராக இயங்கச் செய்யும்.
4. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
5. சரும வறட்சியை நீக்கும். சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.
6. வியர்வைப்பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
7. எலும்புகளுக்கு வலிமை தரும்.
8. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடு செய்யும்.
9. நரம்பு தளர்ச்சியை போக்கும்.
10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
12. உடல் உஷ்ணத்தை தணிக்கும்
13. மலச்சிக்கலைப் போக்கும்.
14. குடல் சளியைப் போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
15. சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் பல் உறுதியாகும்.
Courtesy: Facebook
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ள ாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.
மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்
பொதுவாக பிளாஸ்டிக் உலகம் அனைதிற்கும் கேடு தான் என்றாலும் நமது உணவு முலமாக நம் உடலினுள் உண்டாகும் கேடுகளை பற்றி "மட்டும்" பார்போம் )ஏன் என்றால் உங்கள் சுவை இன்பம்.காம்மில்https://www.facebook.com/ SuvaIinbamcomcuvaiinpamTartKam? ref=hl உணவுகளை மட்டுமே பார்த்து வருகிறோம்)
இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.
சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே)நிரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு
உதா.ம்:-(பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ண்நிர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்)
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள்,மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும்
ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக்
பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்
உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
வாழ்நாளில் திலைப்போம்
ஓட்டல் உணவை தவிர்த்திடு
வீட்டு உணவையே சாப்பிடு.
நன்றி - அரவிந்தன்.
குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்!
குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!
குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது. சரும நோய்கள்: 'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன. ஹார்மோன் பிரச்சினை: டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கிஎறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால்,குழந்தைகளு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு: டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்குநூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும்டயாபர்களு வெட்டப்படும் மரங்கள்: உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க,உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ¬ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது. செலவு குறைவு: 'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில்,பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும். நன்றி - பரமகுடி சுமதி. |
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ள ாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.
மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்
பொதுவாக பிளாஸ்டிக் உலகம் அனைதிற்கும் கேடு தான் என்றாலும் நமது உணவு முலமாக நம் உடலினுள் உண்டாகும் கேடுகளை பற்றி "மட்டும்" பார்போம் )ஏன் என்றால் உங்கள் சுவை இன்பம்.காம்மில்https://www.facebook.com/ SuvaIinbamcomcuvaiinpamTartKam? ref=hl உணவுகளை மட்டுமே பார்த்து வருகிறோம்)
இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.
சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே)நிரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு
உதா.ம்:-(பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ண்நிர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்)
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள்,மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும்
ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக்
பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்
உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
வாழ்நாளில் திலைப்போம்
ஓட்டல் உணவை தவிர்த்திடு
வீட்டு உணவையே சாப்பிடு.
நன்றி - அரவிந்தன்.
சமையலறையில் சஞ்சீவினி...
.............................. .............................. ..........
கறிவேப்பிலை மணம் வீசாத தென்னிந்திய சமையல்றையைக் காண்பது அரிது.
பச்சைக் கறிவேப்பிலை சிறிது கசப்பாக இருந்தாலும் எண்ணெயில் போட்டுத் தாளிக்கும் போது அருமையாக மணக்கும்.
கறிவேப்பிலையை வெறும் வாசனைக்கு மட்டும் தாளிப்பில் சேர்த்துவிட்டு, சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் கண்டிப்பாக அதை உணவோடு சேர்த்து சாப்பிடவேண்டும்.
கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாகச் செய்து இட்லி தோசைக்கு வைத்துக் கொள்ளலாம்.
சத்துக்கள் & பலன்கள் -
நார்ச்சத்து, வைட்டமின் மற்ரும் தாதுப்பொருட்கள் இதில் உள்ளன. மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை ஜீரணத்துக்கு மிகவும் உதவும். இள நரையை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது. சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்த வல்லது.
Courtesy: Facebook
Sunday, March 3, 2013
ஏகாதிசி அறிவியல் காரணம்:
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம். குற்றாலம் பராசக்தி கல்லூரி விஞ்ஞானபிரிவு மாணவிகளின் ஆய்வு இதை தெரிவிக்கிறது.
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம். குற்றாலம் பராசக்தி கல்லூரி விஞ்ஞானபிரிவு மாணவிகளின் ஆய்வு இதை தெரிவிக்கிறது.
ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
- ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
- ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும்.ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
- இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
- ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.
- துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
- துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
- உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
- வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
Courtesy: Facebook
Subscribe to:
Posts (Atom)