Wednesday, September 4, 2013

Indian Traditional foods are forgotten & Culture is spoiled by these junks...


In the Name of Fast-food / Quick Service / Fashion / Ambiance - Indian Traditional foods are forgotten & Culture is spoiled by these junks...
























ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள்..

இப்போ இளைஞர்களோட ஃபேஷனே என்ன தெரியுமா?
அது கே.எப்.சிக்கு போனாலோ, மெர்ரி பிரவுனுக்கு போனாலோ, பிசா சென்டர்களுக்கு அல்லது வேறு எந்த உணவகங்களுக்கு போனாலோ உணவுடன் 
ஒரு கோக் பாட்டிலை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு இடையிடையே குடித்துக்கொண்டே உணவருந்துவது தான்.

இந்த கோக்கின் விஷத்தன்மையை பற்றி இவர்கள் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.

இந்த கோக் என்ற பானத்தை ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி தொங்கவிட்டால் அந்த பாலிதீன் பை அடுத்த நாள் ஓட்டையாகி கோக் சிந்த ஆரம்பித்துவிடும். 
பிளாஸ்டிக் பையை ஓட்டை போடும் வீரியம் இந்த பானத்திற்கு உண்டு.

இவ்வளவு ஏன்.. ஒரு மனிதனின் பிடுங்கப்பட்ட பல் அல்லது ஒரு கோழியின் எலும்பு துண்டு இவற்றை கோக்கில் போட்டு ஊற வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த இரண்டும் கரைந்துபோய் விடுகின்றது.

அப்படி என்றால் அந்த பானத்திற்கு எவ்வளவு வீரியம் இருக்கும் என்பதை யாரும் உணராமல் அல்லது தெரியாமல் எப்போதும் கோக்கோ கோலாவை குடித்துக்கொண்டிருக்கின்றார்கள பலர் நம் நாட்டில்.

உணவு உண்டபின்னர் நமது வயிற்றுப்பகுதிக்குள் சென்று அது செரி மானம் அடைவதற்கு பல்வேறு சுரப்பிகள் நமது உடலில் வேலைகளை செய்து அந்த உணவை செரிக்கச் செய்கின்றது.. 

இதற்கு குறைந்தபட்சம் 4 மணிமுதல் 6 மணி நேரம் தேவைப்படுகின்றது. 
அசைவ உணவு என்றால் இன்னும் கூடுதல் நேரம்பிடிக்கும். 
ஆனால் இந்த கோக்கோ கோலா பானம் உணவு உண்ணும் போது, 
உணவினூடே இடைஇடையே சென்று விடுவதால் செரிமானச் சுரப்பிகள் அனைத்திற்கும் வேலையில்லாமல் செய்துவிட்டு 
அந்தப் பணியை தானே எடுத்துக்கொண்டு உணவில் உள்ள எந்தச் சத்துக்களையும் உடலுக்கு சரிவர அனுப்பாமல் அப்படியே செரிமானம் செய்துவிடுகின்றது..

இந்த பானத்தைப் பற்றி மிகவும் கேவலமாகச் சொல்லவேண்டுமென்றால் மனிதர்கள் டாய்லட்டில் மலம் கழித்துவிட்டு பின்னர் அந்த மலம் வெளியேற flush out செய்து சுத்தப்படுத்துவது போல 

வயிற்றில் உள்ள உணவை அப்படியே கரைத்து உடலில் உள்ள உணவுப்பையை க்ளீன் செய்துவிடுகின்றது இந்த கோக் எனும் பானம்.

ஒரு கோக்கோகோலா பானத்தை டாய்லட் க்ளீனராக பயன்படுத்தினால் டாய்லட் பளிச்சென்றாகிவிடும். 

நாகரீகம் என்கின்ற பெயரில் தங்களது இரைப்பையை டாய்லட் க்ளீனர் கொண்டு நிரப்பிக்கொண்டிருக்கின்றார்கள் இன்றைய இளைஞர்கள்..
குடல் புண், இரைப்பையில் ஓட்டை இப்படி பல சிக்கல்களை இந்தப்பானத்தை தொடர்ந்து பயன்படுத்துவர்களுக்கு ஏற்படுவது உறுதி..

எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் திருந்தாதவர்கள் திருந்தப்போவதில்லை.. 
ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம்..

Tuesday, September 3, 2013

சுக்கு - மருத்துவப் பலன்கள்


சுக்கு

சுக்கு

ஆயுர்வேதப் பெயர் -  'மஹொஷதம்' (மருந்துகளில் எல்லாம் சிறப்பான மருந்து என்று அர்த்தம்). சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.இதை   மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.

மருத்துவப் பலன்கள்:

வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று பிரச்னைகளிலிருந்து விடுபட சுக்கை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.

சுக்கு துண்டை கடித்து மென்றால் பல் கூச்சம், வலி மற்றும் ஈறு வலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்கு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரைக் காய்ச்சி, ஸ்பூன் மூன்று வேளையும் குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, ஆகியவை நீங்கும். 

சுக்குக் கஷாயம் மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை சரியாகும். 

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

அஜீரணத்தைப் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.  

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போயே போச்!

சுக்கைப் பொடித்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து அரைத்து  கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும்.

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர் இறங்கும். தலையில் பேன் பிரச்னைகள் இருந்தால்  ஒழியும்.

ஆயுர்வேதப் பெயர் - 'மஹொஷதம்' (மருந்துகளில் எல்லாம் சிறப்பான மருந்து என்று அர்த்தம்). 

சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.

இதை மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.

மருத்துவப் பலன்கள்:

வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று பிரச்னைகளிலிருந்து விடுபட சுக்கை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.

சுக்கு துண்டை கடித்து மென்றால் பல் கூச்சம், வலி மற்றும் ஈறு வலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்கு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரைக் காய்ச்சி, 
ஸ்பூன் மூன்று வேளையும் குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, ஆகியவை நீங்கும்.

சுக்குக் கஷாயம் மலக்குடல் கிருமிகளை அழிக்கும். 

சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை சரியாகும்.

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

அஜீரணத்தைப் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, 

நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போயே போச்!

சுக்கைப் பொடித்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து அரைத்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும்.

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர் இறங்கும். 

தலையில் பேன் பிரச்னைகள் இருந்தால் ஒழியும்.

Monday, September 2, 2013

வாரியார்


* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். 

இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.

* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன. 

கரையேற நாம் தான் முயற்சியில் இறங்கவேண்டும்.

* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். 

அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள் தெரியப்படுத்துவார்.

* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்.

* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே புனிதமாகிவிடும்.

* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.

- வாரியார்

Sunday, September 1, 2013

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்













நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்

தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் பிரபலமானது. பொதுவாக ஊத்தாப்பம் அரிசியால் செய்யப்படும் ஒரு ரெசிபி. 
ஆனால் அரிசிக்கு பதிலாக, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடியவாறு ஓட்ஸ் கொண்டு, அருமையான முறையில் ஒரு ஆரோக்கியமான ஊத்தாப்பம் செய்யலாம். 
மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையுடன், வித்தியாசமான சுவையைக் கொண்டது.

இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் - 4 துண்டுகள்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/2 கப்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மேலே தூவுவதற்கு...

கேரட் - 1 (தோலுரித்து, துருவியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் கோதுமை பிரட்டை சுற்றியுள்ள பகுதியை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு, 
அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு பௌலில், 
மேலே தூவுவதற்கு என்று கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


பின்பு மற்றொரு பௌலில் அரைத்த ஓட்ஸ், பிரட் பொடி, ரவை, சமையல் சோடா, 
உப்பு, சீரகம், தயிர் சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.


அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், 
அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று சற்று தடிமனாக ஊற்றி, 
அதன் மேல் கேரட் கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 
முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.


இப்போது சூப்பரான ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெடி!!! 
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Saturday, August 31, 2013

முன்னோர்கள் உணவு

 முன்னோர்கள் உணவு



வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான் என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது. 

ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். 

மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. 

ிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.

இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர். மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது. 

அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது. 

துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை. 

பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். 

காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர். 

கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள். 


காலையில் நீராகாரத்தை உண்டனர். 

தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 

இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். 

மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள். 

மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை. 

மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள். 


உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள். 

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.

பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள். 

உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது. 

இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். 

அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும். 

நெய்யை சாத த்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள். 

அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள். 

இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.

மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.


இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள். 

அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குயாயை மேலும் விரித்து விடும். 

பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள். 

இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். 

அடுத்து மோர் சாதம். இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும். 

அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.

பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 

இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். 

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

Friday, August 30, 2013

மாதுளையின் மகத்துவம்












மாதுளையின் மகத்துவம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. 
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. 
பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. 
இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. 
பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. 
குடற்புண்களை ஆற்றுகிறது. 
எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. 
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். 
சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். 
தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. 
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். 
மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். 
சரீரம் குளிர்ச்சியடையும். 
காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். 
புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். 
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். 
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். 
மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
 மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

Courtesy: S.Iswarya

Sunday, August 25, 2013

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

மூளையைத் தூங்க விடாதீர்கள்!



பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. 

நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. 


அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. 

நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். 

அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். 

முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். 


பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். 

பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள்.

பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். 

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். 

இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். 


அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். 

அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். 

இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். 

அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். 


அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். 

வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். 

சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். 

முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. 


உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். 

ஒரு அறையை இழுங்கள். 

அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். 

(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). 

பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். 


அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். 

இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். 

இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, 


அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். 


அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். 

இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். 

மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். 


நினைத்ததைச் சாதியுங்கள்.

BEST Water To boost weight loss - 2L water, 1 medium cucumber, 1 lemon, 10-12 mint leaves. 

Steep overnight in fridge and drink it all the next day. 

Also great for general detox--including clear skin. 

Do this everyday for a week and see the result

Courtesy: Facebook