Monday, February 18, 2013

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடு

Saturday, February 16, 2013

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .

ஞாபகம் குறித்து சில தகவல்கள் :

நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம் ,திரும்ப திரும்ப செய்தல் 

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit 

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும் 

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல் 

நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி 
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள் 

1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்

2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் . 

4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள் 
உதரணம் news - north ,east,west,south 

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை

8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளுதில் செரிக்கும் உணவை செர்த்துகொள்வது நல்லது.

Courtesy: Facebook

Tuesday, February 12, 2013

ருத்திராட்ச மாலையின் பெருமை.

ருத்ராட்சம் 
என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். 

சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. 

இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. 

இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். 

ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.

மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.

ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.

பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்திராட்சம் அணிந்தவர்கள், ருத்திராட்சம் அணியாதவர்களை வணங்கக்கூடாது. ருத்திராட்சம் அணிந்தவர்கள் சிவசொரூபம் ஆவார்கள். (வைணவர்கள் ருத்திராட்சம் அணியும் வழக்கம் இல்லை. அவர்கள் துளசிமணியை அணிவதால் ருத்திராட்சம் அணிந்த சிறப்புகளைப் பெறுவார்கள்.) ஒருவர் இயற்கையாக மரணம் அடையும்போது ருத்திராட்ச மரத்தின் காற்றுபட்டால் அவர்களுக்கு கைலாச பதவி கிடைக்கும் என்பார்கள். ருத்திராட்ச தானத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.

Saturday, February 9, 2013

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்..

நன்றி: பேஸ்புக்

முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். 

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக ..!!!

ரிஷிகளும், சித்தர்களும் நமக்களித்த பல அபூர்வமான விஷயங்கள் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். பல யுகங்களாக குரு சிஷபயர் பரம்பரையாகவும், மிக இரகசியமாகவும், பல கட்டுப்பாடுகளுடனும் பின்பற்றப் பட்டுவந்த அவைகளை கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் நாம் நிறையவே இழந்துவிட்டோம். அதற்கு பல காரணங்கள். கால மாற்றங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், அரசியல் மாற்றங்கள், ஆட்சிமுறை மாற்றங்கள், அன்னியர்களின் படையெடுப்பு, நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட கலாசார வீழ்ச்சி என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது அவையெல்லாம் புத்துயிர் பெற்று வருவது போலத் தோன்றினாலும் மரணமில்லா பெரு வாழ்வு என்கிற கலையை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு விஞ்ஞான வளர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும், சரியான வழிகாட்டும் குருமார்கள் இல்லை என்பதுவும் தான். இப்படி ஒரு காலகட்டம் வரும் என்று முன்பே சித்தர்கள் அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் எங்கள் நூல்கள் கிடைக்கப் பெறுபவர்கள் புரியவில்லையே என்று கலங்க வேண்டாம். அதிலுள்ள வரிகளை மீண்டும் மீண்டும் படித்தால் பொருள் தன்னால் உங்களுக்கு விளங்க வரும் என்று சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இடையிடையே உள்ள பாடல்களைப் படித்தால் எதுவும் விளங்காது. தவறாகப் பொருள் கொண்டு எதையாவதுச் செய்து பார்த்தால் அது சித்தியாகாது. அதன் பிறகு எங்கள் நூல்களை குறை கூறுவதால் எந்தப் பயனுமில்லை என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக ஒரு பாடலை மட்டும் சொல்கிறேன் படியுங்கள்.
நல்லாக சாஸ்திரங்க ளெல்லாந் தன்னை
நாடியே யுழைத்துநீ நாடிப் பார்த்து
கல்லாக மனதுதனி லெண்ணி நீயும்
கருத்துறவே யூணிப்பார் கடினமில்லை. பாடல் 144
யாக்கோபு சுண்ணம் 300ல் உள்ள ஒரு பாடல் இது.
இப்படி ஆண்டுகள் பல வனங்களில் திரிந்து, அன்ன ஆகாரமின்றித் தவமிருந்து அந்தத் தவ வலிமையால் தங்கள் உடல்கூறுகளைத் துல்லியமாக உணர்ந்து விஞ்ஞானத்துக்கும் எட்டாத பல அபூர்வ விஷயங்களை நமக்கு சுயநலமின்றி தந்தருளியுள்ள இவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள, அதை முழுவதுமாக உணர நாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ ? தெரியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கலியுகத்தில் என்ன நடக்கும் என்று தற்போது நடக்கும் விஷயங்களை முன்னரே எவ்வளவுத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வியந்து போனேன். போகர் 7000 மூன்றாம் காண்டத்தில் உள்ள பாடல் இது.(பாடல் -2019, 2020)
''காணவே சொல்லறிய உலக ஆசான்
கருதியவன் பணம்பறிக்க எத்துப் பண்ணி
நீணவே நெடிதாகச் சிவம் உண்டு பண்ணி
நிலையாமல் சீடனுக்கு பிறப்பு உண்டாக்கி
ஊணவே உலகமெல்லாம் இப்படியே போச்சு
உக்கி அந்த மாயத்தே உழன்று போனார்
தாணவேதான் தாள்திறந்தால் அவனே ஆசான்
சமர்த்தான குரு தேடி சார்பு கொள்ளே
சார்புறல்தான் சொல்லறியான் உலக ஆசான்
சமரசமாய்ப் பணம்பறிக்க சாங்கம் சொல்வான்
நாவுறவே நாள்போக்கிச் செபத்தைப் பண்ணி
ஞானியென்று பெயரிட்டுக் கொண்டு தானும்
பாரிலேதான் சஞ்சரிப்பார் சையோகிப்பார்
பரிந்தகுடி கெடுப்பார்கள் பொய்யும் சொல்வார்
ஓர்வுறவே வேடங்கள் அதிகம் பூண்பார்
உருட்டுவார் உலகத்து ஞானிதானே.''
தன்னைப் பெரிய குருநாதன் என்று சொல்லிக் கொண்டு, பெரிய சிவலிங்கங்களை உண்டு பண்ணி, பொய்களைக் கூறி உன்னிடமுள்ள பணத்தை யெல்லாம் பறிப்பார்கள். நிலையான யோகம் ஏதும் அறியாமல், இவர்களை நம்பி வந்த சீடர்களையும் பிறவிச்சுழலில் சிக்க வைப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் பொய்யான மாயப் பேச்சில் இந்த உலகில் உள்ள நிறைய பேர் மயங்கிப் போனார்கள். முறையான வாசியோகத்தைக் கற்றுக் கொடுத்து, ஞான வழியை யார் காட்டுகிறாரோ அவரே உண்மையான குருவாவார். அவரை நீ தேடிக் கொள். அதைவிட்டுவிட்டு பலவிதமானப் பொய்களைக் கூறி பணம் பறிப்பவர்களையும், நாட்கணக்கில் ஜெபம் செய்தால் போதும் என்று சொல்லிக் கொண்டும், பெண்போகம் செய்து கொண்டும், தான் ஒரு ஞானி என்று சொல்லிக் கொண்டும், உருட்டு, புரட்டாகப் பேசி குடிகெடுக்கும் சண்டாளர்களை இனம் கண்டு கொண்டு அவர்களை நெருங்கிவிடாமல் கவனமாக இரு என்று எவ்வளவு தெளிவாக்க் கூறி இருக்கிறார் பாருங்கள். அடுத்து இந்தப் பாடலைப் பாருங்கள்.
''மலைமலை யாய்ச் சுற்றிச் சுற்றி மாண்டவர் கோடி
மறை நூல்கள் கற்றறிந்து மாண்டவர் கோடி
கலை பலவும் கற்றறிந்து மாண்டவர் கோடி
கரை சேர வழிதேடி மாண்டவர் கோடி
சிலைகளெ ல்லாம் சுற்றி வந்து மாண்டவர் கோடி
சிறையைப் போல் குகையிருந்து மாண்டவர் கோடி
அலைபோல மனமாயை தன்னினாலே
அலைந்த லைந்து மாண்டவர்கள் கோடி கோடி
நிலைபெறாத யோகத்தில் மாண்டவர் கோடி
நின்று கொண்டே தவமிருந்து மாண்டவர் கோடி
உலையா சந்யாசத்தில் மாண்டவர் கோடி
ஒன்றி நின்ற சம்சாரத்தில் மாண்டவர் கோடி
மன்றாடி பூசை செய்தும் மாண்டவர் கோடி
வலை போல பின்னி நிற்கும் வாசியைத் தானே
வழி நடத்த அறியாமல் மாண்டவர்கள் கோடானு கோடி.''
பொருள் வெட்ட வெளிச்சமாகப் புரிகிறது பாருங்கள். இவ்வளவு தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகும், மனதில் சந்தேகம் கொண்டு பொன்னான வாழ்வை வீணாக்கலாமா ?

Courtesy: Facebook

மதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா?

சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம்  சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள்  வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர்,  மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார்.  மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்)

மாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா?

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு  முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப்  பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில்  மதுரை என்றும் அழைக்கப் படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது.

சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர்,  நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்  வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை.  ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?  தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன.  மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில்  எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.

நச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப்பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே  அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார்.

இவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.  பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது.

மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார்.  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட  ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி  எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது. 

இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்...  அது ஒரு கனாக்காலம்.