Wednesday, September 11, 2013
ரோஜா பூ - மருத்துவபயனும் உண்டு
மலர்களுக்கு மருத்துவபயனும் உண்டு
அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா.
ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது.
வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது.
இதயத்திற்கு வலுவூட்டும்.
இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.
பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும்.
மலமிளக்கியாக செயல்படும்.
ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி,
அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும்.
நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.
ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து,
ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.
இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.
தேவையானால் மேலும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.
பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள்
இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும்,
மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.
இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது.
Tuesday, September 10, 2013
நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை'
நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை'
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம்.
இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான்.
இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு.
மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.
எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது.
அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.
* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது.
உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம்.
அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய்,
புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது.
கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.
* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும்.
கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.
* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Saturday, September 7, 2013
ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது.
இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.
கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும்.
இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.
இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.
பப்பாளியின் மருத்துவக் குணங்கள்...!
பப்பாளியின் மருத்துவக் குணங்கள்...!
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக
மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம்
குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய
பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
பப்பாளியின் மருத்துவக் குணங்கள்...!
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
Friday, September 6, 2013
How Raw Lady Finger Can Help in curing Diabetes?
How Raw Lady Finger Can Help in curing Diabetes?
Many people in the world are suffering from Diabetes.
Here is an easy cure for diabetes. Lady finger a natural vegetable which can be used as a cure for diabetes.
Instead of painful and expensive treatment available in the market
Lady Finger An Easy Cure For Diabetes
How To Control Diabetes From Lady Finger?
Here is the simple tip to control diabetes from lady finger.
Take two or three lady fingers. Cut them from the centre and put them into the glass full with the water.
Leave them for the full night. In the morning remove lady finger and drink the water before breakfast.
Repeating the same process every day will help you to reduce your sugar level.
This simple tips is better than many other painful treatments.
Fresh lady finger is better than cooked one.
Low G.I Food:
the word G.I stands for Glycemic index.
The person who is suffering from diabetes should take diet enriched in Glycemic index.
Approximately 20 G.I is present in okra. That is very low.
Diabetic patients can easily use Okra recipes as their meal to fill their stomach and also control their diabetic level.
Fight Kidney Diseases:
lady finger is also good to prevent your body from different kidney diseases.
It is considered that high sugar level effect your both kidneys badly.
So by taking okra daily will prevent your kidneys.
Have an moderate amount of okra daily if you are a diabetic person.
Soluble Fibers:
Soluble fibers are very important to keep your kidneys healthy.
They play their role in digestion of carbohydrates. Lady finger is enriched with soluble fibers.
It slow down the digestion process and hence lower the sugar level in blood.
These are some of the main reasons for you to select lady finger as a diet to control diabetes.
Thursday, September 5, 2013
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.
இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும்.
வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது.
இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.
உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன.
அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Wednesday, September 4, 2013
Indian Traditional foods are forgotten & Culture is spoiled by these junks...
In the Name of Fast-food / Quick Service / Fashion / Ambiance - Indian Traditional foods are forgotten & Culture is spoiled by these junks...
ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். .
இப்போ இளைஞர்களோட ஃபேஷனே என்ன தெரியுமா?
இப்போ இளைஞர்களோட ஃபேஷனே என்ன தெரியுமா?
அது கே.எப்.சிக்கு போனாலோ, மெர்ரி பிரவுனுக்கு போனாலோ, பிசா சென்டர்களுக்கு அல்லது வேறு எந்த உணவகங்களுக்கு போனாலோ உணவுடன்
ஒரு கோக் பாட்டிலை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு இடையிடையே குடித்துக்கொண்டே உணவருந்துவது தான்.
இந்த கோக்கின் விஷத்தன்மையை பற்றி இவர்கள் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.
இந்த கோக்கின் விஷத்தன்மையை பற்றி இவர்கள் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.
இந்த கோக் என்ற பானத்தை ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி தொங்கவிட்டால் அந்த பாலிதீன் பை அடுத்த நாள் ஓட்டையாகி கோக் சிந்த ஆரம்பித்துவிடும்.
பிளாஸ்டிக் பையை ஓட்டை போடும் வீரியம் இந்த பானத்திற்கு உண்டு.
இவ்வளவு ஏன்.. ஒரு மனிதனின் பிடுங்கப்பட்ட பல் அல்லது ஒரு கோழியின் எலும்பு துண்டு இவற்றை கோக்கில் போட்டு ஊற வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த இரண்டும் கரைந்துபோய் விடுகின்றது.
இவ்வளவு ஏன்.. ஒரு மனிதனின் பிடுங்கப்பட்ட பல் அல்லது ஒரு கோழியின் எலும்பு துண்டு இவற்றை கோக்கில் போட்டு ஊற வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த இரண்டும் கரைந்துபோய் விடுகின்றது.
அப்படி என்றால் அந்த பானத்திற்கு எவ்வளவு வீரியம் இருக்கும் என்பதை யாரும் உணராமல் அல்லது தெரியாமல் எப்போதும் கோக்கோ கோலாவை குடித்துக்கொண்டிருக்கின்றார்கள பலர் நம் நாட்டில்.
உணவு உண்டபின்னர் நமது வயிற்றுப்பகுதிக்குள் சென்று அது செரி மானம் அடைவதற்கு பல்வேறு சுரப்பிகள் நமது உடலில் வேலைகளை செய்து அந்த உணவை செரிக்கச் செய்கின்றது..
உணவு உண்டபின்னர் நமது வயிற்றுப்பகுதிக்குள் சென்று அது செரி மானம் அடைவதற்கு பல்வேறு சுரப்பிகள் நமது உடலில் வேலைகளை செய்து அந்த உணவை செரிக்கச் செய்கின்றது..
இதற்கு குறைந்தபட்சம் 4 மணிமுதல் 6 மணி நேரம் தேவைப்படுகின்றது.
அசைவ உணவு என்றால் இன்னும் கூடுதல் நேரம்பிடிக்கும்.
ஆனால் இந்த கோக்கோ கோலா பானம் உணவு உண்ணும் போது,
உணவினூடே இடைஇடையே சென்று விடுவதால் செரிமானச் சுரப்பிகள் அனைத்திற்கும் வேலையில்லாமல் செய்துவிட்டு
அந்தப் பணியை தானே எடுத்துக்கொண்டு உணவில் உள்ள எந்தச் சத்துக்களையும் உடலுக்கு சரிவர அனுப்பாமல் அப்படியே செரிமானம் செய்துவிடுகின்றது..
இந்த பானத்தைப் பற்றி மிகவும் கேவலமாகச் சொல்லவேண்டுமென்றால் மனிதர்கள் டாய்லட்டில் மலம் கழித்துவிட்டு பின்னர் அந்த மலம் வெளியேற flush out செய்து சுத்தப்படுத்துவது போல
இந்த பானத்தைப் பற்றி மிகவும் கேவலமாகச் சொல்லவேண்டுமென்றால் மனிதர்கள் டாய்லட்டில் மலம் கழித்துவிட்டு பின்னர் அந்த மலம் வெளியேற flush out செய்து சுத்தப்படுத்துவது போல
வயிற்றில் உள்ள உணவை அப்படியே கரைத்து உடலில் உள்ள உணவுப்பையை க்ளீன் செய்துவிடுகின்றது இந்த கோக் எனும் பானம்.
ஒரு கோக்கோகோலா பானத்தை டாய்லட் க்ளீனராக பயன்படுத்தினால் டாய்லட் பளிச்சென்றாகிவிடும்.
ஒரு கோக்கோகோலா பானத்தை டாய்லட் க்ளீனராக பயன்படுத்தினால் டாய்லட் பளிச்சென்றாகிவிடும்.
நாகரீகம் என்கின்ற பெயரில் தங்களது இரைப்பையை டாய்லட் க்ளீனர் கொண்டு நிரப்பிக்கொண்டிருக்கின்றார்கள் இன்றைய இளைஞர்கள்..
குடல் புண், இரைப்பையில் ஓட்டை இப்படி பல சிக்கல்களை இந்தப்பானத்தை தொடர்ந்து பயன்படுத்துவர்களுக்கு ஏற்படுவது உறுதி..
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் திருந்தாதவர்கள் திருந்தப்போவதில்லை..
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் திருந்தாதவர்கள் திருந்தப்போவதில்லை..
ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம்..
Tuesday, September 3, 2013
சுக்கு - மருத்துவப் பலன்கள்
சுக்கு
ஆயுர்வேதப் பெயர் - 'மஹொஷதம்' (மருந்துகளில் எல்லாம் சிறப்பான மருந்து என்று அர்த்தம்).
சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.
இதை மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.
மருத்துவப் பலன்கள்:
வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று பிரச்னைகளிலிருந்து விடுபட சுக்கை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.
சுக்கு துண்டை கடித்து மென்றால் பல் கூச்சம், வலி மற்றும் ஈறு வலி குறையும்.
இரண்டு ஸ்பூன் சுக்கு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரைக் காய்ச்சி,
ஸ்பூன் மூன்று வேளையும் குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, ஆகியவை நீங்கும்.
சுக்குக் கஷாயம் மலக்குடல் கிருமிகளை அழிக்கும்.
சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை சரியாகும்.
தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
அஜீரணத்தைப் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும்.
சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து,
நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போயே போச்!
சுக்கைப் பொடித்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து அரைத்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும்.
சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர் இறங்கும்.
தலையில் பேன் பிரச்னைகள் இருந்தால் ஒழியும்.
Monday, September 2, 2013
வாரியார்
* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான்.
இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.
* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன.
கரையேற நாம் தான் முயற்சியில் இறங்கவேண்டும்.
* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம்.
அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள் தெரியப்படுத்துவார்.
* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்.
* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே புனிதமாகிவிடும்.
* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.
- வாரியார்
Sunday, September 1, 2013
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பம்
தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் பிரபலமானது. பொதுவாக ஊத்தாப்பம் அரிசியால் செய்யப்படும் ஒரு ரெசிபி.
தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் பிரபலமானது. பொதுவாக ஊத்தாப்பம் அரிசியால் செய்யப்படும் ஒரு ரெசிபி.
ஆனால் அரிசிக்கு பதிலாக, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடியவாறு ஓட்ஸ் கொண்டு, அருமையான முறையில் ஒரு ஆரோக்கியமான ஊத்தாப்பம் செய்யலாம்.
மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையுடன், வித்தியாசமான சுவையைக் கொண்டது.
இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் ஊத்தாப்பத்தின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை பிரட் - 4 துண்டுகள்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/2 கப்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மேலே தூவுவதற்கு...
கேரட் - 1 (தோலுரித்து, துருவியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கோதுமை பிரட்டை சுற்றியுள்ள பகுதியை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு,

அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில்,
மேலே தூவுவதற்கு என்று கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் அரைத்த ஓட்ஸ், பிரட் பொடி, ரவை, சமையல் சோடா,
உப்பு, சீரகம், தயிர் சேர்த்து நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும்,
அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று சற்று தடிமனாக ஊற்றி,
அதன் மேல் கேரட் கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, தீயை குறைவில் வைத்து,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ஓட்ஸ் ஊத்தாப்பம் ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)