Tuesday, June 25, 2013

C.F.L .பல்புகள் உடைந்தால்...?

C.F.L .பல்புகள் உடைந்தால்...?

C.F.L .பல்புகள் உடைந்தால்...?

என்ன செய்யலாம்...!  என்ன செய்யக் கூடாது...!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...!


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . 

ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . 

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . 

அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .


சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?


* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . 

நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .


* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . 


வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . 


அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .


* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .


* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , 'சீல்' செய்யவும். 

சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .


Tuesday, June 18, 2013

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்...!



  • ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்...!

    வெல்லம்  
.     
ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா?  ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். 

பலன்கள் -

・ எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். 
・ 
・ பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும். 
・ 
・ சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். 
・ 
・ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
・ 
・ ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.
・ 
・ பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை அனுபானமாகச் செய்து தரலாம். 
・ 
・ இந்த வெல்லத்தில் சமையலில் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 
・ 
・ வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.  
・ 
・ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். மலம் சரிவர கழியாது. ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் (50 கிராம்) எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் சூட்டினால் வரக் கூடிய வயிற்று வலி குறையும். 
・ 
・ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும். 

அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சத்துணவை தனித்தனியாக சாப்பிடுவதால் பெரியதாக பலன் எதுவும் இருக்காது. தேவைக்கேற்றபடி கலந்து சாப்பிட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

வெல்லத்தை வெல்கம் செய்து அனிமியாவுக்கு குட் பை சொல்வோம்!
    ஆஸ்துமாவை விரட்டும்
 வெல்லம்...!

ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். 

எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும். 

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். 
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

    ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? 
    ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். 
    வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. 
    இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். 

  • பலன்கள் -

    ・ எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

    ・ பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

    ・ சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

    ・ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

    ・ ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

    ・ பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை அனுபானமாகச் செய்து தரலாம்.

    ・ இந்த வெல்லத்தில் சமையலில் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    ・ வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

    ・ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். மலம் சரிவர கழியாது. 
    ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் (50 கிராம்) எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் சூட்டினால் வரக் கூடிய வயிற்று வலி குறையும்.

    ・ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.

    அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    அந்தந்த சத்துணவை தனித்தனியாக சாப்பிடுவதால் பெரியதாக பலன் எதுவும் இருக்காது. தேவைக்கேற்றபடி கலந்து சாப்பிட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

    வெல்லத்தை வெல்கம் செய்து அனிமியாவுக்கு குட் பை சொல்வோம்!

Monday, June 17, 2013

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்



புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ப்ராக்கோலி

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நட்ஸ்

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

பப்பாளி

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஒயின்

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

via இயற்கையின் நண்பர்கள்

Sunday, June 9, 2013

மாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் !!!!

Coping With Common Period Problems


மாதவிலக்கு வலி குறைய இய‌ற்கை வைத்தியம் !!!!

நண்பர்கள் இந்த தகவலை முடிந்த அளவுக்கு ஷேர் செய்யுங்கள் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும். முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டி தேவையான உப்பும் சேர்த்து ‘சூப்’ போல செய்து பருகி வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும். முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி பொறுக்க கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும். முருங்கைக் கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு குணமாகும். அவ்வாறு இரண்டொரு முறை தேய்க்க நல்ல குணம் கிடைக்கும்

* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு….ஹெல்த் ஸ்பெஷல்
மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா… பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போய்விடுவார்கள் அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்…நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, பாட்டி சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா… எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.

வெள்ளைப்படுதல் சரியாக:

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா… வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா… நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்க்கு:

சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை – 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க… ஒழுங்கா மாதவிடாய் வரும்.

மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா… பெரும்பாடு தீரும்.

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா… மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே !

நன்றி
சீலா ராணி